தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகன் : தோழியுடன் சேர்ந்து கொலை செய்த தாய்

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகனைத் தாயே,தோழியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகன் : தோழியுடன் சேர்ந்து கொலை செய்த தாய்
x
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்த சோழங்கபுரத்தை சேர்ந்தவர் மீனாம்பாள்.கணவர் இறந்த நிலையில்,13 வயது மகன் அங்குராஜூடன் வாழ்ந்து வந்துள்ளார். கூலி தொழில் செய்து வந்த மீனாம்பாளுக்கு, கொத்தனார் முத்தழகு என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.மீனாம்பாளின் தோழியான லட்சுமியும்,முத்தழகுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மகன் அங்குராஜிற்கு தெரிய வரவே,தமது உறவினர்களிடம் சம்பவத்தை கூறி அழுதுள்ளான்.தம்மை அவமானப்படுத்திய மகனை பழிவாங்க எண்ணிய தாய் மீனாம்பாள்,அங்குராஜிற்கு தூக்க மாத்திரை கொடுத்து,தோழி லட்சுமியின் 
உதவியுடன்,கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.மகன் மயங்கிவிழுந்து உயிரிழந்துவிட்டதாக  கதறி அழுது நாடகத்தை அரங்கேற்றிய நிலையில், காவல்துறையின் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.சம்பவம் தொடர்பாக தாய் மீனாம்பாள்,தோழி லட்சுமியை கைது செய்த காவல்துறையினர், முத்தழகனை தேடி வருகின்றனர்.கள்ளக்காதலுக்காக, பெற்ற மகனை தோழியுடன் சேர்ந்து கொன்ற தாயின் செயல்,அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Next Story

மேலும் செய்திகள்