ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழா : ஆடிப்பெருக்கையொட்டி தயாராகும் சுமங்கலி செட்கள்

புதுக்கோட்டையில் ஆடிப் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு சுமங்கலி செட்கள் விற்பனைக்காக தயாராகி வருகின்றன.
ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழா : ஆடிப்பெருக்கையொட்டி தயாராகும் சுமங்கலி செட்கள்
x
ஆடி மாத முக்கிய விழாவான ஆடி 18ஆம் தேதி, ஆடிப்பெருக்கு தினத்தில் நீர் நிலைகளில் பெண்கள் வழிபடுவது வழக்கம். 

காவிரி ஆறு உள்ளிட்ட ஆறுகளிலும் ஏரிகள் மற்றும் வீடுகளிலும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி,  குங்குமம் உள்ளிடட பொருட்களை வைத்து வழிபடுவார்கள். 

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வருவதையொட்டி,  புதுக்கோட்டையில் சுமங்கலி செட் பைகள் தயாராகி வருகின்றன. இவை வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளன. 

காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுவதாலும், ஏரி, குளங்கள் நிரம்பி இருப்பதாலும், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்