ஆசிரியர் பணி நியமனத்தில் அதிரடி மாற்றம் - 2 தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்

ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதி தேர்வு, நியமனத்துக்கான போட்டி தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்தில் அதிரடி மாற்றம் - 2 தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்
x
* தமிழகத்தில் ''டெட்'' எனப்படும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இதில் வெயிட்டேஜ் முறை விரைவில் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கனவே அறிவித்திருந்தார். 

* ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் 60 சதவீதம், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றின் மதிப்பெண் 40 சதவீதம் என கணக்கிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, பிளஸ்-2 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி என, ''வெயிட்டேஜ்'' முறையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வந்தது. 

தற்போது, இந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வு தனியாகவும், நியமனத்துக்கான போட்டி தேர்வு தனியாகவும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* பொதுப்பள்ளி  கல்வி வாரிய முடிவின்படி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், இதனை அறிவித்துள்ளார். 

* இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், போட்டித் தேர்வுக்கு செல்லலாம். போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் பணி நியமனம் வழங்கப்படும். இந்த முறை, ஆந்திராவில் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்