10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களாக இருந்தாலும் சட்டப்படிப்பு முடித்திருந்தால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் தனித்தேர்வாக எழுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, சட்டம் பயின்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களாக இருந்தாலும் சட்டப்படிப்பு முடித்திருந்தால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
x
* சென்னையை சேர்ந்த ராகுல் வாஞ்சிநாதன் உள்ளிட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடர்ந்திருந்த வழக்கில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வாக எழுதி, பட்டப்படிப்பை தொலைதூரக்கல்வி படித்து  சட்டப்படிப்பு முடித்தவர்களை வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்ய மறுப்பதாக தெரிவித்திருந்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுப்பையா மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, முறைப்படி பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்புகளை   தனித்தேர்வாக எழுதி,  ஐந்தாண்டு சட்டப் படிப்பை 
முடித்து இருந்தால், அவர்களை வழக்கறிஞராக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 

* ஆனால்10 மற்றும் 12ம் வகுப்பு படிக்காமல் தொலைதூர கல்வியில் பட்டப்படிப்பை முடித்தவர்களை சட்டப்படிப்புக்கு அனுமதிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்