ராமாயண, மகாபாரத கதை கூறும் இஸ்லாமியர்

பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், பள்ளிகள் தோறும் சென்று நீதி போதனை வகுப்புகளை எடுத்து வருகிறார் இந்த தமிழாசிரியர்...
ராமாயண, மகாபாரத கதை கூறும் இஸ்லாமியர்
x
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து, சுமார் 3 மணி நேரம், மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் தமிழாசிரியர் சாகுல் ஹமீது... 

ஓய்வு பெற்று விட்டோமே என்று ஒதுங்கிவிடாமல், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச்சுழன்று, அரசுப் பள்ளி மாணவர்களை சந்தித்து வருகிறார். ராமாயண, மகாபாரத கதைகளைக் கூறியும், பாடல்கள் மூலமாகவும், நகைச்சுவையாகவும், நீதிபோதனைகளை உற்சாகமாக உரையாற்றி வருகிறார். 

வீட்டில் அடைப்பட்டுக் கிடக்காமல், 60 வயதை தாண்டிய போதிலும், தமிழ் சார்ந்த சீர்திருத்த கருத்துக்களை கூறி, இலவசமாகவை வகுப்பெடுத்து வருகிறார். 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த சாகும் ஹமீது, தாம் இஸ்லாமியராக இருந்த போதும், மதங்களுக்கு அப்பாற்பட்டு, மத நல்லிணக்க விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்