சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தக் கூடாது - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்

10 மணி நேரம், 12 மணி நேரம் அமர வைப்பதால் மன ரீதியாக மாணவர்களை பாதிக்க செய்வதாக புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தக் கூடாது - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்
x
சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தக் கூடாது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் 10 மணி நேரம், 12 மணி நேரம் அமர வைப்பதால் மன ரீதியாக மாணவர்களை பாதிக்க செய்வதாக புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் மாணவர்களை அமர வைப்பதால், பல்வேறு உடல் உபாதைகள், சிறுநீரக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  எனவே, பள்ளி வேலை நேரத்திற்கு மிகாமல் பாட வகுப்புகளை தனியார் பள்ளிகள் திட்டமிட வேண்டும் எனவும் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, பெற்றோர் சம்மதத்துடன் சனிக் கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்