சோழர் காலத்து பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில், சோழர் காலத்தைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோழர் காலத்து பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள கற்களை அகற்றும் போது, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாறையை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள், கி.பி. 963-ஆம் ஆண்டில், மதுரை கொண்ட கோப்பரகேசரி என்ற முதலாம் பரந்தாக சோழனால்  பாறை பொறிக்கப்பட்டிருக்கலாம் என்பதை கண்டறிந்தனர். சிங்கபுர நாட்டு மீவழி மலையனூரைச் சேர்ந்த நல்லுழார், கரைமாந்தன் காரி, நீலாங்காரி, தேருமான்விமாச்சி மற்றும் மலையகுட்டி ஆகிய நான்கு பேரும், மேல்மலைப்பள்ளி தேவர் என்ற சமண கடவுளுக்கு, தங்களது நிலங்களை கொடையாக கொடுத்தார்கள் என இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுக்கு சற்று தொலைவில் சமணக் கோவில் ஒன்று இருந்துள்ளதால், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த ஊர் மலையனூர் என அழைக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்