இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்

இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் 2வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்
x
பப்ளிக் அஃபயர்ஸ் சென்டர் என்ற ஆய்வு நிறுவனம், இந்தியாவில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தரும் மாநிலங்களின் பட்டியலை, சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2 கோடி மக்களுக்கு அதிகமாக உள்ள மாநிலங்கள், 2 கோடி மக்களுக்கு குறைவாக உள்ள மாநிலங்கள் என இரண்டு பிரிவாக வரிசைப்படுத்தப்பட்டு அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வெளியான ஆய்வு அறிக்கையில், சிறந்த நிர்வாகத்தை தரும் பெரிய மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் கேரளாவும், 3வது இடத்தில் தெலங்கானாவும் 4வது இடத்தில் கர்நாடக மாநிலமும் 5வது இடத்தில் குஜராத்தும் உள்ளன. இதுபோல, நல்லாட்சி தரும் சிறிய மாநிலங்களில் முதலிடத்தை இமாச்சல் பிரதேசம் பிடித்துள்ளது. கோவா, மிசோராம், சிக்கிம், திரிபுரா ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்