நீர் இல்லாமல் கருகும் கரும்பு பயிர்கள்...குமுறும் விவசாயிகள்...

மேல்மலையனூர் பகுதியில் பாசனத்திற்கு நீர் இல்லாததால், கரும்பு பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீர் இல்லாமல் கருகும் கரும்பு பயிர்கள்...குமுறும் விவசாயிகள்...
x
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள சீயப்பூண்டி கிராமத்தில், நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. மழையையும், கிணற்று நீரையும் நம்பி, இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக பாசனத்திற்கு போதிய நீர் இல்லாமல் கரும்புகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கரும்புகள் 2 அடிக்கு மேல் வளராததால், அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள், இன்னும் சில நாட்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகும் எனவும் குமுறுகின்றனர். மேலும், பயிர்க்காப்பீடு என்ற பெயரில் பணம் வசூலிக்கும் அரசும், தனியார் சர்க்கரை ஆலைகளும், கருகிய பயிர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை என குற்றம்சாட்டும் சீயப்பூண்டி கிராம மக்கள், இதேநிலை தொடர்ந்தால் கிராமத்தை காலி செய்துவிட்டு வேறு வேலை பார்க்கச் செல்ல வேண்டும் எனவும் தங்களது வேதனையை பதிவு செய்கின்றனர்.. அரசு தலையிட்டு, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே, சீயப்பூண்டி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்