சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு
பதிவு : ஜூலை 23, 2018, 01:13 PM
தமிழகம் முழுவதும் சொத்து வரியை, 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1998-ஆம் ஆண்டில் இருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் உள்ளதால், பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவு தொடர்பாக உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில்  உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதனையடுத்து சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, தற்போதைய வரியில் இருந்து 50 சதவீதம் வரை கூடுதலாக வசூலிக்கப்படவுள்ளது.வாடகை குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு, தற்போது செலுத்தப்படும் வரியில் இருந்து நூறு சதவீதம் வரை கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசாணையால்,  குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

பிற செய்திகள்

சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் : ரூ.14.91 லட்சம் வாடகை வழங்கிய துணை முதலமைச்சர்

சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதற்காக வாடகையாக கடந்த மாதம் 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு மூலம் பன்னீர்செல்வம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

680 views

ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

28 views

சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை

சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞர் ஒருவர், ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்.

16 views

கவிஞர் வைரமுத்து மீது வழக்கு தொடர தயார் - சின்மயி பரபரப்பு பேட்டி

கவிஞர் வைரமுத்து மீது வழக்கு தொடர தயாராக உள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

211 views

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்- உயர்நீதிமன்றம்

மத சடங்குகளில் தலையிடுவதில் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

315 views

படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் - பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மேற்படிப்பை தொடர தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

486 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.