வேண்டும் வரங்களை தரும் சத்யமங்கலம் பண்ணாரி அம்மன்
பதிவு : ஜூலை 23, 2018, 07:34 AM
வேண்டும் வரங்களை தரும் சத்யமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலின் சிறப்புகளை பற்றி ஒரு தொகுப்பு..
ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில், தமிழக- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பன்னாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சத்யமங்கலத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.முன்பொரு காலத்தில் வனப்பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக, மக்கள் அழைத்துச் சென்றபோது, ஓரிடத்தில் பசு ஒன்று தானாகவே பாலினை சுரந்ததாகவும், அந்த இடத்தில் சுயம்புவாக சிலை ஒன்று இருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்த மக்கள் அந்த இடத்தில் கோயில் கட்டி, பண்ணாரி அம்மனாக வழிபட்டு வருவதாகவும், இக்கோயிலின் தலபுராணம் கூறுகிறது.ஆண்டுதோறும் பங்குனிமாதம் நடைபெறும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலின் குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் பக்தர்கள் தீமிதிக்கும், ஒரே கோயில் இதுதான்.

பிற செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

9 views

ஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.

35 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : நேரில் ஆஜராக, இறந்தவருக்கு சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

386 views

எம்.பி.பி.எஸ் படிப்பில் 30 அரசுப் பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், கூடுதலாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

192 views

பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

378 views

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.