மது போதையில் மனைவி, 2 மகன்கள் மண்வெட்டியால் வெட்டி கொலை - கணவர் கைது
தஞ்சையில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் என 3 பேரை மண்வெட்டியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த ஜெயக்குமார் என்பவரை அய்யம்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வின் மகனான ஜெயக்குமாருக்கும், தஞ்சை டவுண்கரம்பையை சேர்ந்த அனிதாவிற்கும் திருமணமாகி 2 மகன்கள் இருந்த நிலையில், வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரிந்து இருந்த அனிதா சமீபத்தில்தான் பேச்சுவார்த்தைக்கு பிறகு கணவன் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு குடிபோதையில் சண்டைபோட்ட ஜெயக்குமார் வீட்டில் இருந்த மண்வெட்டியால் இரண்டு மகன்களையும் மனைவியும் வெட்டி உள்ளார். இதில் மகன்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மனைவி அனிதா தஞ்சை மருத்துவமனையில் உயிரிழந்தார். 3 பேரை தாக்கி கொன்ற ஜெயக்குமாரை அய்யம்பேட்டை காவல்துரையினர் கைது செய்தனர்
Next Story