மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைகக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் - மருத்துவக்கல்வி இயக்குனர்

அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, 2ஆம் கட்ட மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைகக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் - மருத்துவக்கல்வி இயக்குனர்
x
தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைகக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடந்தது. இதில் 3 ஆயிரத்து 582 மாணவர்கள் சேர்ந்தனர். இதனிடையே, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வழங்கியது.  இந்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து, 2ஆம் கட்ட மருத்துவ படிப்பு கலந்தாய்வு தேதிகளை மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோவிடம் கேட்ட போது, அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், எஞ்சிய இடங்கள் தமிழகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அதன் பின்னரே, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்