கூட்டுறவு சங்கம் மூலம் ஆர்டர்கள் வழங்க வேண்டும் - கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை

தமிழகத்தின் பாரம்பரிய தொழிலான கைத்தறி நெசவை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கூட்டுறவு சங்கம் மூலம் ஆர்டர்கள் வழங்க வேண்டும் - கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை
x
திருத்தணியை அடுத்த முருகூர்,பொதட்டூர்பேட்டை,  மத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக கைத்தறி நெசவுத்தொழில் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கைலி, வேஷ்டி, துண்டு, போர்வை உள்ளிட்ட பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட பெடல் லூம் தறியை அமைத்து நெசவாளர்கள் சிலர் நெசவு செய்து வருகின்றனர். இதனையடுத்து கைத்தறி கூட்டுறவு சங்க அதிகாரிகள், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆர்டர்கள் வழங்காமல், பெடல் லூம் தறியை அமைத்துள்ளவர்களுக்கே ஆர்டர் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கைத்தறி நெசவாளர்கள் கூறியுள்ளனர். மேலும் நூல்விலை ஏற்றமும் தங்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழகத்தின் பாரம்பரிய தொழிலான கைத்தறி நெசவை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்