புதுக்கோட்டைக்கு வந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு

புதுக்கோட்டை வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்
புதுக்கோட்டைக்கு வந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்தார். பேருந்து நிலையத்தில் தூய்மை பணி  மற்றும் விழிப்புணர்வு பேரணியையும் ஆளுநர் துவக்கி வைத்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், குடிசை மாற்று வாரிய வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்