புதுக்கோட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தல்
கடத்தி சென்ற 7 பேர் கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி அருகே உள்ள மேலக்கூட்டுன்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர்.
பேரூரணியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம்
5 லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டு, திருப்பி தரவில்லை
என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையை அடுத்த அல்லிக்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முத்துகிருஷ்ணனை, வழிமறித்த ஒரு கும்பல், கத்தி முனையில் மிரட்டி, காரில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து முத்துகிருஷ்ணன் மனைவி புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில், கடன் கொடுத்த கிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர், முத்துகிருஷ்ணனை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story