சென்னை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு கடிதம் அனுப்பியவர் குறித்து விசாரணை
சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை திரிசூலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு தென்காசியை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவருக்கு 85 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், எழும்பூர் மற்றும் திரிசூலம் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடிதத்தில் அனுப்புநரின் முகவரி மற்றும் அவர் கூறிய ரயில்வே ஊழியரின் விபரம் தெளிவாக இல்லை. இருந்தாலும், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Next Story