சென்னையில் பூட்டிய வீட்டில் கருகிய நிலையில் ஆண் சடலம்
சென்னையில் செல்போன் வியாபாரி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு மண்ணெண்ணய் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ஆலந்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பூட்டி இருந்த வீட்டில் நேற்றிரவு புகை வெளியேறியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் கதவை உடைத்து, தீயணைப்பு துறையினர் பார்த்தபோது, படுக்கையறையில் கை கால்கள் கட்டப்பட்டு கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. போலீஸ் விசாரணையில், சடலமாக கிடந்தவர் பண்ருட்டியைச் சேர்ந்த முகமது சுல்தான், என்பதும், அவர் செல்போன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் முகமது சுல்தான் இருந்துள்ளார். இதனால் தொழில் போட்டி காரணமாக சுல்தான் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்
Next Story