திருநங்கை குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு : குறும்படம் வெளியிடும், திருநங்கை நலச்சங்கத்தினர்

திருநங்கை குழந்தைகளை பெற்றோர் அரவணைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட திருநங்கை நலச் சங்கத்தினர், வருடந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
திருநங்கை குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு : குறும்படம் வெளியிடும், திருநங்கை நலச்சங்கத்தினர்
x
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான திருநங்கைகள், குடும்பத்தை விட்டு விலகி, தனியாக வாழ்ந்து வருகின்றனர். தங்களது வாழ்வாரத்திற்காக, பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களும் சக மனிதர்கள் தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை நலச் சங்கத்தினர், களம் இறங்கியுள்ளனர். 

வருடந்தோறும், கல்லூரிகளுக்குச் சென்று, திருநங்கைகள் தொடர்பான குறும்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில், குறும்படத்தை, மாவட்ட ஆட்சியர் வெளியிடுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்