தனியார் பள்ளி ஆசிரியரின் கழுத்தை அறுத்த இளைஞன் - ஆட்டோவில் நிகழ்ந்த பயங்கரம்
பழனி தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த பவித்ரா என்ற பெண் பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பழனி தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த பவித்ரா என்ற பெண் பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு ஒரு இளைஞருடன் பேருந்து நிலையம் அருகில் ஆட்டோவில் சென்ற போது, அந்த இளைஞர் பவித்ராவை கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த பவித்ராவை, ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story