போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு - கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது

வாட்ஸ் அப் குரூப் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கணினி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு - கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது
x
வாட்ஸ் குரூப் மூலம் போலி வாக்காளர் அட்டை விற்பனை?

நாகர்கோவில் கோட்டாரில், போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்ததாக, கம்யூட்டர் சென்டர் உரிமையாளரான செந்தில் மற்றும் ஊழியர் சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து, ஏராளமான போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், கோவையில், சதீஷ்குமார் என்ற கம்யூட்டர் சென்டர் உரிமையாளரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போலி வாக்காளர் அட்டை விற்பனைக்காக வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த குரூப்பில் உள்ள பலர், தமிழகம் முழுவதும் கம்யூட்டர் சென்டர் நடத்தி வருவதாகவும், அவர்களும் போலி வாக்காளர் அட்டை அச்சடித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்