தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழை - வேகமாக நிரம்பி வரும் அணைகளின் நீர்மட்டம்...

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழை - வேகமாக நிரம்பி வரும் அணைகளின் நீர்மட்டம்...
x
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் 40 சதவீதம் அதகரித்துள்ளது. 



* மேட்டூர் அணையின் நீர்மட்டம் பத்து நாட்களில் 13 அடி அதிகரித்து 71 அடியாக உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 34 ஆயிரத்து 426  கன அடியாக உள்ளது.

* மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழை கராணமாக தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 123  அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 3 ஆயிரத்து 122 கன அடியாக உள்ளது.

* 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், 48  அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து ஆயிரத்து 30 கன அடியாக உள்ளது.

* சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123 கனஅடியாகவும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 கன அடியாகவும் சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

* நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

* பாபநாசம் அணையின் நீர்மட்டம் 92 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81 அடியாகவும் உயர்ந்துள்ளது.

* அமராவதி அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில் 11 அடி அதிகரித்து 65 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 3 ஆயிரத்து 648 கனஅடியாக உள்ளது.

* பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்