நிர்மலா தேவி விவகாரம் - குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் ஜாமின் தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பதிவு : ஜூலை 12, 2018, 06:13 PM
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும், வழக்கு முடியும் வரை ஜாமின் தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நிர்மலா தேவி விவகாரம் - 3 பேருக்கும் ஜாமின் தர முடியாது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான முறையில் வழி நடத்தியதாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிர்மலா தேவி, முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கருப்பசாமி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சாமிநாதன், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம், இந்திய கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலான பிரச்சினை என்பதால், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை வழக்கு முடியும் வரை வெளியே விட முடியாது என தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 16-ஆம் தேதியில் சிபிசிஐடி போலீசார் தங்களது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், செப்டம்பர் பத்தாம் தேதியன்று கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் செப்டம்பர் மாதம் 24 தேதியன்று, விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தனது விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், 6 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி எதிர்ப்பு

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி எதிர்ப்பு.

95 views

ஆளுநர் அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் - ஹெச். ராஜா

தமிழக ஆளுநர் அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்படுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

45 views

பிற செய்திகள்

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - 9 பேர் விடுதலை ஏன்?

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...

3 views

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - நடிகர் ராஜ்குமார் மகன்

தமது தந்தை கடத்தப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அவரது மகன் ராகவேந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

11 views

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்

3 views

சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

110 views

பிரேத பரிசோதனை உடலை தைக்காமல் கொடுத்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே கடந்த 21 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

7 views

குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்

குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.