நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

8 ஆண்டுகளாக நிலுவை தொகை வழங்காததால் நகராட்சி ஆணையர் முன் விஷம் அருந்தி படுத்து கொண்டார்.
நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் நகராட்சி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், பல ஒப்பந்தாரர்களுக்கு நிலுவை தொகை வழங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், துரை என்ற ஒப்பந்ததாரர், தமக்கு வர வேண்டிய 30 லட்சம் ரூபாய் நிலுவை தொகைக்கு 8 ஆண்டுகளாக போராடியுள்ளார். இதனால் மணமுடைந்த அவர், நகராட்சி ஆணையர் முன் விஷம் அருந்தி படுத்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், துரையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்