சென்னையில் சினிமா பாணியில் கள்ளநோட்டு கொடுத்து மோசடி

பணத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து கடனை கொடுத்தவர் கைது
சென்னையில் சினிமா பாணியில் கள்ளநோட்டு கொடுத்து மோசடி
x
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் பாலசுப்பிரமணியம் என்பவரிடம், கடந்த மே மாதத்தில், ராஜேஷ் என்பவர் தன்னுடைய காரை அடமானமாக வைத்து இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றார். பின்னர் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக பாலசுப்ரமணியனின் அலுவலகத்திற்கு சென்ற ராஜேஷ் சென்றுள்ளார். அங்கு பாலசுப்ரமணியன் இல்லாததால், அவரது சகோதரர்  வேல்முருகனிடம் 2 லட்ச ரூபாய் பணத்தையும் வட்டியையும் செலுத்திவிட்டு காரை எடுத்துச் சென்றுள்ளார். மறுநாள், ராஜேஷ் அளித்த பணத்தை எண்ணிப்பார்த்த வேல்முருகனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 2ஆயிரம் ரூபாய் பணக்கட்டில் முதல் மற்றும் கடைசி நோட்டுகளை மட்டும் அசல் நோட்டாக வைத்துவிட்டு, மீதமுள்ள  ஒரு லட்சத்து 96ஆயிரம் ரூபாய்க்கு, கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட  கள்ள நோட்டுகளை வைத்து, வேல்முருகனிடம் ராஜேஷ் அளித்துள்ளார்.  இதையடுத்து ராஜேஷ் மீது, திருமங்கலம் காவல் நிலையத்தில் பாலசுப்ரமணியன் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ராஜேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்