கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை

ஆற்றின் அகலம் தெரியாமல் தமிழக அரசு அனுமதி கொடுத்ததும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை
x
* புனித தாமஸ் மலை பகுதியில் அடையாறின் வலது பக்கத்தில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் பயிற்சி கழக பிரதான வளாகமும், இடது பக்கத்தில் பயிற்சி மையமும் உள்ளது. 300 அடி அகல அடையாற்றில் 150 அடி தொலைவுக்கு பிரெய்லி பாலம் அமைக்க தமிழக அரசிடம் அதிகாரிகள் பயிற்சி கழகம் அனுமதி கோரியது. 

* தரைப்பாலம் உள்ளதால் முதலில் மறுத்த தமிழக அரசு பின்னர் தற்காலிகமாக சிறிது காலத்திற்கு என்று அனுமதி வழங்கியது. இந்நிலையில் பெய்லி பாலம் 150 அடியில் ஆற்றின் நடுபகுதியில் அமைக்கப்பட்டது.

* பாலத்தின் இருபுறமும் மணலால் இணைக்கப்பட்டது. இந்த பாலமும், தரைப்பாலமும் பெரு வெள்ளக் காலத்தில் ஆற்றின் நீரோட்டத்தை தடுத்து மணப்பாக்கம், நந்தம்பாக்கம் பகுதியில் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ காரணமாக அமைந்துவிட்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

* ஆற்றின் அகலம் தெரியாமல் தமிழக அரசு அனுமதி கொடுத்ததும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

* இதேபோன்று ஜாபர்கான் பேட்டையில் தரைப்பாலத்துக்கு பதிலாக மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும், தரைப்பாலம் அகற்றப்படாததும்,

* தடையில்லா சான்று பெறாமல் மெட்ரோ ரயில் நிறுவனம் அமைத்த பாலம், ஆகியவையும் வெள்ள நீர் ஓட்டத்தை தடுத்ததாகவும் அதில் இடம் பெற்றுள்ளது. 

* இதனால், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், ஜாபர்கான் பேட்டை மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்க காரணமாக அமைந்ததாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

* இதேபோன்று கிண்டி தொழிற் பேட்டையில் கட்டப்பட்டு உள்ள 420 மீட்டர் நீள உயர்மட்டப் பாலமும் ஆற்று நீரின் ஓட்டத்தை தடுப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

* கோட்டூர்புரத்தில் புதிய பாலம் அடையாற்றில் கட்டப்பட்டு உள்ள நிலையில், பழைய பாலத்தை அகற்றாதது, நீரோட்டத்திற்கு தடையாக மாறி கோட்டூர்புரத்தின் மேல்மடை பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* வெள்ளத்திற்கு காரணமான இத்தகைய தடைகளை நீர்நிலைகளில் அனுமதித்த நீர்வள ஆதாரத்துறையின் அலட்சிய செயலை, இறுக்கத்துடன் பதிவு செய்ய நேரிட்டதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

* அடையாற்றின் குறுக்கே இரண்டாவது ஓடுபாதையை அமைத்து சென்னை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்துக்கு அரசு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கியது. 

* இந்த ஓடுபாதைகள் கீழே உள்ள பாலத்தின் தூண்கள் மற்றும் முறையற்ற பராமரிப்பால், 2015-ல் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க காரணமாக அமைந்ததாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

* விமான நிலைய ஆணையம் நிபந்தனைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய நீர்வள ஆதாரத்துறை தவறிவிட்டதும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

* குப்பைகளை கொட்ட உள்ளாட்சி அமைப்புகளும், பொது கட்டமைப்பை உருவாக்க அரசும் நீர்நிலைகள் சேதமடைவதை கருத்தில் கொள்ளாமல் ஆக்கிரமித்து உள்ளதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்