ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் - பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை

தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் -  பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை
x
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் 

தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கபினி அணையில் இருந்து விநாடிக்கு 38 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே,  ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் - கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இடைவிடாது மழை பெய்து கொண்டிருக்கிறது. கூழாங்கல் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள சோலையார் அணை முழுக்கொள்ளளவான162 புள்ளி ஏழு இரண்டு அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்த, அந்த அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்