டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - லாரி வாடகையை உயர்த்தித் தரக் கோரிக்கை

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - லாரி வாடகையை உயர்த்தித் தரக் கோரிக்கை
x
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள இந்துஸ்தான்  பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் பணியில், ஆயிரக்கணக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டுளளன. தற்போது கிலோ மீட்டருக்கு 1 ரூபாய் 60 காசு வீதத்தில் வழங்கும் வாடகை தொகையை, 2 ரூபாய் 60 காசாக உயர்த்தித் தர வலியுறுத்தி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கும், அரசு பணிமனை உள்ளிட்டவற்றுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்