2019 முதல் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை - தமிழக அரசு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story