பொறியியல் கலந்தாய்வு - திடீர் சிக்கல்

ஜூலை 31க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்ற உத்தரவை தளர்த்தக்கோரி, அண்ணா பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வு - திடீர் சிக்கல்
x
பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூலை 31க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்ற உத்தரவை தளர்த்தக்கோரி, அண்ணா பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

* பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, இன்று வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், பெரும்பான்மை மாணவர்கள் பங்கேற்க கூடிய பொதுப்பிரிவு கலந்தாய்வு எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. 

* இந்த நிலையில் ஜூலை 31க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் (All Indian Technical Education Committee)  உத்தரவை தளர்த்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் அண்ணா பல்கலை மனுத்தாக்கல் செய்திருக்கிறது. 

* அதில், ஜூலை 31க்குள் கலந்தாய்வை முடிக்க வாய்ப்புகள் இல்லை எனவும், எனவே கால வரையறையை தளர்த்தி உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. 

* இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கும் உத்தரவிற்கு பிறகே, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

* கலந்தாய்வு தாமதமானால், ஆக.1-ம்தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்