வரதட்சணைக்காக 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய விசைத்தறி தொழிலாளி
பதிவு : ஜூலை 06, 2018, 12:11 PM
மாற்றம் : ஜூலை 06, 2018, 03:15 PM
விசைத்தறி தொழிலாளி ஒருவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் சங்ககிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே உள்ள புதுரெட்டியூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி... இவரது கணவரும், மகனும் இறந்து விட்டதால், சங்ககிரியில் உள்ள தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது கிருஷ்ணவேணியிடம் அன்பாக பேசிய பூபதி என்பவர், அவரை திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த கிருஷ்ணவேணி, வேறு ஆதரவு இல்லாததால், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த சிறிது  நாட்களிலே தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார் பூபதி... கிருஷ்ணவேணி குடும்பத்தாரிடம் 10 பவுன் நகை 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்ட பூபதி, மேலும் வரதட்சணை கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளனர். சிறிது நாட்களில், மாமனார், கோவிந்தசாமி, மாமியார் சிங்காரியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கிருஷ்ணவேணியை சித்திரவதை செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி, அக்கம்பக்கதினரிடம் பூபதி பற்றி விசாரித்துள்ளார். அவர்கள் கூறியது கிருஷ்ணவேணியை அதிர வைத்தது. 

ஆம்... பூபதி ஏமாற்றியவர்களில், கிருஷ்ணவேணி பத்தோடு பதினொன்று தான்... இதற்கு முன் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பூபதி, ஆறாவதாகவே, கிருஷ்ணவேணியின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார்...

ஏற்கனவே கணவரையும், மகனையும் இழந்த தனக்கு மறுவாழ்வு கிடைத்ததாய் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணவேணிக்கு இந்த செய்தி, வெந்த புண்ணில் வேலை பாச்சியது போல் வேதனை அளித்துள்ளது..

கிருஷ்ணவேணி, அளித்த புகாரின் பேரில் பூபதியை கைது செய்த சங்ககிரி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பூபதியின் தாய், தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.