"சான்றிதழை பறிகொடுத்த மாணவனுக்கு உதவ தயார்" - சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சான்றிதழை பறி கொடுத்த மாணவன் பூபதிராஜாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சான்றிதழை பறிகொடுத்த மாணவனுக்கு உதவ தயார் - சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
x
விருதுநகர் புதுப்பட்டியை சேர்ந்த பூபதி ராஜா என்பவர்,  மருத்துவ கலந்தாய்வில் கலந்துக் கொள்ள சென்னை வந்த போது அவரது கல்விச் சான்றிதழ்கள் திருடப்பட்டன.

இது தொடர்பான செய்தியின் அடிப்படையில், மாணவனுக்கு உதவி செய்யும்படி,  நீதிபதி வைத்தியநாதன்  அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், அனைத்து நகல் சான்றிதழ்களையும் மாணவன் பூபதிராஜாவுக்கு வழங்கி, எல்லா உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றும், ஆனால், அந்த மாணவன் இன்னும் அரசை அணுகவில்லை எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் முனுசாமி, நீதிபதியிடம் தெரிவித்தார். மாணவன் உதவி கேட்டு வந்தால் விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்று, நீதிபதி வைத்தியநாதன் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்