பிளாஸ்டிக் கழிவு தொழில்நுட்பத்தில் சாலைகள், தமிழகத்தில் 12,961 கி.மீ சாலைகள் அமைப்பு

பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுமான பொருட்களுடன் கலந்து நவீன தொழில்நுட்பத்தில் சாலைகளை உருவாக்குவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
பிளாஸ்டிக் கழிவு தொழில்நுட்பத்தில் சாலைகள், தமிழகத்தில் 12,961 கி.மீ சாலைகள் அமைப்பு
x
பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து உருவாக்கப்படும் சாலைகள் அதிக நாட்கள் சிதையாமல் இருப்பதோடு, செலவும் குறைவு. பிளாஸ்டிக் கழிவுகளை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த இத்தகைய சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

இந்நிலையில், கடந்த 2011-2012 ஆம் ஆண்டு, ஆயிரத்து 796 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், நபார்ட்-ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, ஊரக உட்கட்டமைப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ், 12 ஆயிரத்து 961 கிலோ மீட்டருக்கு பிளாஸ்டிக் கழிவு தொழில்நுட்பத்தை கொண்டு, தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்கபட்டுள்ளன. 

இந்தத் தகவல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்