பிறவி மாற்றுத்திறனாளியாக 2 பிள்ளைகள்... விபத்தில் 3 துண்டுகளான தந்தையின் கால்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மாற்றுத்திறனாளியாக உள்ளதால், பிழைக்க வழியின்றி தவித்து வருகின்றனர்...
x

பிறவி மாற்றுத்திறனாளியாக 2 பிள்ளைகள்... விபத்தில் 3 துண்டுகளான தந்தையின் கால்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மாற்றுத்திறனாளியாக உள்ளதால், பிழைக்க வழியின்றி தவித்து வருகின்றனர்.

சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் - காமாட்சி தம்பதிக்கு நரசிம்மன், வசந்தகுமார் என்ற இரண்டு மகன்கள், துர்கா தேவி என்ற மகள் உள்ளனர். இதில், நரசிம்மன், துர்கா தேவி இருவரும் பிறவியிலேயே மாற்றுத்திறனாளிகள். மர சீப்பு வியாபாரம் செய்து மூன்று பிள்ளைகளையும் முனியப்பன் காப்பாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு நெல் அறுவடை இயந்திரம் மோதிய விபத்தில், முனியப்பனின் கால் மூன்று துண்டுகளாக உடைந்து, அவரும் மாற்றுத்திறனாளியானார். மேலும், கடைசி மகன் வசந்தகுமாரின் மூன்று வயது பெண் குழந்தையும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பிழைக்க வழியின்றி தவித்து வருவதால், பட்டதாரி மாற்றுத்திறனாளியான நரசிம்மனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்