அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் நீக்கம்?
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் நீக்கம்?
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் உட்பட 11 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால
பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் எல்எல்ஏக்கள் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்
அதிமுகவின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து
நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த வெங்கடாச்சலம், கோவிந்தராஜ், அரியலூரை சேர்ந்த
விஜயபார்த்திபன், கண்ணகி குப்புசாமி, சுரேஷ்குமார், திண்டுக்கல்லை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த சீனிராஜ்,
கருப்பூர் சீனி, கணேஷ்பாண்டியன், வினோபாஜி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் அதிமுகவினர் எந்தவித தொடர்பும்
வைத்துக் கொள்ளக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.