வெளியில் வராத 14,000 கோடி...ஆர்.பி.ஐ வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

x

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்வதற்கான காலக்கெடு அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. தொடந்து புழக்கத்தில் உள்ள நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், காலக்கெடுவை அக்டோபர் 7ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அக்டோபர் எட்டாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டுமே மாற்ற முடியும் எனவும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே, செப்டம்பர் 29ஆம் தேதி வரை, 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாகவும், 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மட்டும் வங்கிகளுக்கு வரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்