கரடு முரடான மலைப்பாதையில் 14 கி.மீ. நடந்த கலெக்டர்

x

வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் நெக்னாமலை கிராமம் தரை மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததை அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவரை மலைகிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்