மாயனூர் கதவணையில் வினாடிக்கு 1,13,252 கன அடி வீதம் நீர்வரத்து- பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x

மாயனூர் கதவணையில் வினாடிக்கு 1,13,252 கன அடி வீதம் நீர்வரத்து- பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்துள்ள காரணத்தால் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாயனூர் காவிரி கதவணைக்கு வினாடிக்கு 2 லட்சத்துக்கும் மேலான கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று வினாடிக்கு 1 லட்சத்து 13 ஆயிரத்து 252 கன அடிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இந்த தண்ணீர் அப்படியே வாய்க்கால்களில் வெளியேற்றப்பட்டு வருவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்