இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-10-2023)

x

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவு வருத்தம் அளிக்கிறது.......பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்களுக்கு பேரிழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பக்தர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்

மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்.....பங்காரு அடிகளாரின் ஆன்மீக புரட்சி மிகவும் மதித்து போற்றத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி.......

பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல்.........பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்..........

பங்காரு அடிகளார் உடலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் அஞ்சலி........திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்...........

"ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை ஆயிரத்து 200 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்......வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தகவல்.........

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் மறுப்பு...அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்பு எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...

"வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும்....தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்..........

பேரிடர்களின்போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை..........பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து நாளை சோதனை ஓட்டம்......

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் எப்படி........லியோ விஜய் படமா? லோகேஷ் படமா?....தந்தி டிவியின் சிறப்பு திரைவிமர்சனம்.........

உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி..........கோலியின் அதிரடி சதத்தால் இலக்கை எளிதாக எட்டியது...........


Next Story

மேலும் செய்திகள்