101 வீரர்கள்... 45 நாட்கள்... சாதனை படைத்த 5 மாற்றுத்திறனாளிகள் | Drawing

x

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் "ஹோப்-கடவுளின் குழந்தைகள்" எனும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது... 300 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர். அவர்களில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. தென் இந்திய பகுதிகளின் தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

5 மாற்றுத்திறனாளி மாணவர்கள் 101 விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை வரைந்து ராபா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்... அவர்களை கவுரவப் படுத்தும் விதமாக மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் நடிகர் தலைவாசல் விஜயால் வழங்கப்பட்டது... இயக்குநர் அறிவழகன் 25 ஆயிரம் ரூபாய்க்கான சோலையை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கினார். பிரபல பாடகி பிரியங்கா மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நன்கொடை திரட்டும் வகையில் பாடல்கள் பாடினார்


Next Story

மேலும் செய்திகள்