ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்

x

90களில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அறிமுகமான ஹீத் ஸ்ட்ரீக், அசத்தலான ஆல்-ரவுண்டராக வலம் வந்தவர். ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளில் ஆயிரத்து 990 ரன்களும், 189 ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்து 943 ரன்களும் ஹீத் ஸ்டீரிக் அடித்துள்ளார். மிரட்டலான பவுலராக அறியப்படும் ஸ்ட்ரீக், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை சேர்த்து 450க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஜிம்பாப்வேவின் கிரிக்கெட் அடையாளமான ஸ்ட்ரீக், ஓய்வு பெற்ற பிறகு ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகளுக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டார். புற்றுநோய் பாதிப்பிற்கு நீண்ட நாட்களாக சிகிச்சை மேற்கொண்ட ஸ்ட்ரீக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ட்ரீக் உயிரிழந்ததை அவரது மனைவி நாடின் ஸ்ட்ரீக் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்ட்ரீக்கின் மறைவுக்கு கிரிக்கெட் உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்