மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்/மகுடம் சூடிய பெங்களூரு மகளிர் அணி

x

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய மெக் லேனிங் - சஃபாலி வர்மா தொடக்க ஜோடி பவர்பிளேவில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. எனினும் சோஃபி மோலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் 8வது திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் சஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்ஸி ஆகிய மூவரின் விக்கெட்டையும் மோலினெக்ஸ் வீழ்த்தினார். தொடர்ந்து ஷ்ரேயங்கா பாட்டிலின் சுழலில் டெல்லி தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய டெல்லி 19வது ஓவரில் 113 ரன்களுக்கு சுருண்டது. ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும் மோலினெக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்