இறுதிப்போட்டியில் பெங்களூரு - டெல்லி கோப்பையை வசமாக்கப் போவது யார்?

x

இறுதிப்போட்டியில் பெங்களூரு - டெல்லி

கோப்பையை வசமாக்கப் போவது யார்?

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள இறுதிப்போட்டியில் மெக் லேனிங் தலைமையிலான டெல்லி அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக டெல்லியும், எலிமினேட்டர் போட்டியில் மும்பையை சாய்த்து பெங்களூருவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி, இந்த முறை கோப்பையைக் கைப்பற்ற கடுமையாகப் போராடக்கூடும். முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் பெங்களூரு மகளிர் அணி, ரசிகர்களின் நீண்ட கால கோப்பை கனவை நிறைவேற்றுமா என்பதற்கு இன்றிரவு விடை கிடைத்துவிடும். இரு அணிகளும் பல நட்சத்திர வீராங்கனைகளைக் கொண்டுள்ளதால் இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்