டெல்லி த்ரில் வெற்றி.. ஒரு ரன்னில் கோட்டைவிட்ட பெங்களூரு

x

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் பெங்களூருவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றியை ருசித்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி அதிரடியாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார். பின்னர் 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. எலைஸ் பெரி 49 ரன்களும், சோஃபி மோலினெக்ஸ் 33 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் பெங்களூருவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது ரிச்சா கோஷ் முதல் 5 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் அடித்தார். அரைசதத்தையும் அவர் கடந்த நிலையில் கடைசி பந்தில் பெங்களூருவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட ரிச்சா கோஷ் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்