சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நிறைவு

x

மாமல்லபுரத்தில் நடந்த தமிழ்நாடு சர்வதேச அலைச்சறுக்கு போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டென்ஷி இவாமி, சாரா வகிடா ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். கடந்த 14-ம் தேதி தொடங்கிய போட்டியில், மலேசியா, ஜப்பான் உட்பட 11 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் இரு பிரிவுகளிலும் ஜப்பானை சேர்ந்தோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். பட்டம் வென்றோருக்கு கேடயங்கள் வழங்கி அதிகாரிகள் கெளரவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்