உலகக்கோப்பை கனவுக்கு போட்ட முட்டுக்கட்டை..கடைசி நிமிடத்தில் RSAவுக்கு விழுந்த மரண அடி...| SA vs AUS

x

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய பவுமா, ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆனார். டிகாக் 3 ரன்களுக்கும், மார்க்ரம் 10 ரன்களுக்கும், டுசன் 6 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா திணறியது. நிதானமாக ஆடிய கிளாசென்-மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. ஹெட் ஓவரில் 47 ரன்களில் கிளாசென் ஆட்டமிழக்க, அடுத்து வந்த யான்சென் டக்-அவுட் ஆனார். மறுமுனையில் தனியொருவராகப் போராடிய மில்லர் சதம் விளாசி ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்