உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நியூசி. - வெளியான புள்ளிபட்டியல்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. 6 புள்ளிகளுடன் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3வது இடத்திலும், பாகிஸ்தான் 4வது இடத்திலும் உள்ளன. 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து 5வது இடத்திலும் உள்ளது.

அதே 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 6வது இடத்திலும், ஆஸ்திரேலியா 7வது இடத்திலும் நெதர்லாந்து 8வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 9வது இடத்திலும் உள்ளன. வெற்றிக் கணக்கை தொடங்காத இலங்கை, கடைசி இடத்தில் இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்