உலக தடகள சாம்பியன்ஷிப் - ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா? | Javelin throw
ஹங்கேரியில் நடைபெற்றுவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இன்று விளையாட உள்ளார். இந்திய நேரப்படி புடாபெஸ்ட் நகரில் இரவு 11.45 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு கடும் போட்டி இருக்கக்கூடும். எனினும், சவால்களை சமாளித்து முதல் முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரஜ் சோப்ராவுடன் இணைந்து இந்திய வீரர்கள் மானு, கிசோர் ஜேனாவும் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளனர்.
Next Story
