பெண்கள் பாதுகாப்பு..ஸ்கெட்ச் போட்ட வீராங்கனை..ஒரே ஸ்ட்ரெச்சில் 22,000 கி.மீ. அசத்தும் தடகள வீராங்கனை

x

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள தடகள வீராங்கனை, 22 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தடகள வீர‌ரும், மலையேற்ற வீர‌ருமான ஆஷா மால்வியா, கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி போபாலில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் 28 மாநிலங்களை கடந்து சென்ற இவர், 22 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை கடந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை அடைந்தார். வரும் 15 ஆம் தேதி சுத‌ந்திர தினத்திற்குள் 25 ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை நிறைவு செய்ய ஆஷா மால்வியா திட்டமிட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்