விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அரபு வீராங்கனை ..

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு துனிசிய வீராங்கனை ஒன்ஸ் ஜெபர் முன்னேறி உள்ளார்...
x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அரபு வீராங்கனை ..

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு துனிசிய வீராங்கனை ஒன்ஸ் ஜெபர் முன்னேறி உள்ளார்.மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், செக் குடியரசு வீராங்கனை பஸ்கோவாவுடன் ஜெபர் மோதினார். இதில் முதல் செட்டை 6க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் பஸ்கோவா வெல்ல, 2வது செட்டை 6க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெபர் தனதாக்கினார். இதனால், ஆட்டம் கடைசி செட் வரை சென்ற நிலையில், கடைசி செட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெபர், 6க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் கால்பதித்தார். விம்பிள்டன் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அரபு வீராங்கனை என்றும் ஜெபர் சாதனை படைத்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்